ராஜதந்திரம் நன்கு அறிந்த அரசியல் தலைவர் கலைஞர் கருணாநிதி என்று மம்தா பானர்ஜி புகழாரம் சூட்டியுள்ளார் .
ஜூன் 3 ஆம் தேதியான இன்று தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் 96வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்கள் பிரபலங்கள் கலைஞருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மேற்கு வங்காளத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் கலைஞருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அனைவராலும் மிகவும் நேசிக்கப்பட்ட ஒரு அரசியல் தலைவர் என்றும், அரசியலில் ராஜதந்திரங்களை மிகவும் நன்கு அறிந்தவர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.