நல்ல விமர்சனங்கள் பெற்றும் வசூல் ரீதியாக வெற்றி பெறாததால் தலைவி படக்குழுவினர் ஏமாற்றம் அடைந்தனர்.
மறைந்த ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் ‘தலைவி’. இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் பிரபல நடிகை கங்கனா ரனாவத் நடித்திருந்தார். மேலும் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி நடித்துள்ளார்.
இப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றுள்ளது. ஆனால் இந்தியா முழுவதும் இன்று வரை தலைவி திரைப்படம் 10 கோடி வரை தான் வசூல் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. தலைவி திரைப்படம் ரசிகர்களை திரையரங்கிற்கு வரவைக்கும் என்று படக்குழுவினர் எதிர்பார்த்த நிலையில் தற்போது அவர்களுக்கு ஏமாற்றம் கிடைத்துள்ளது.