இட்லி மற்றும் தோசைக்கு ஏற்ற நல்ல காரசாரமான மதுரை மிளகாய் சட்னி செய்யலாம் வாங்க .
தேவையான பொருட்கள் :
காய்ந்த மிளகாய் – 20
தக்காளி – 2
பூண்டு – 3 பல்
பெருங்காயத்தூள் – 1/2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கருவேப்பிலை – தேவையான அளவு
நல்லெண்ணெய் – தேவையான அளவு
செய்முறை :
முதலில் காய்ந்த மிளகாயை தண்ணீரில் ஊற வைத்து கொள்ள வேண்டும். பின்னர் ஊற வைத்த மிளகாயுடன் தக்காளி , பூண்டு, கருவேப்பிலை , உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி , பெருங்காயத்தூள் போட்டு தாளித்து , அரைத்த விழுதை சேர்த்து கொதிக்க விட்டு இறக்கினால் நல்ல காரமான மிளகாய் சட்னி தயார்!!!