Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நல்லா தான் போச்சு…. திடீர்னு பத்திக்கிச்சு….. நூலிழையில் உயிர் தப்பிய குடும்பம்….!!

சென்னை திருவான்மியூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில்பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.

சென்னையை சேர்ந்த மகேஷ் என்பவர் காரில் தனது குடும்பத்தினருடன் திருவான்மையூர் நோக்கி சென்றுள்ளார். திருவான்மியூர் நெருங்கியபோது காரின் உள்பக்கம் எஞ்சினில் இருந்து திடீரென புகை வர ஆரம்பித்துள்ளது. இதையடுத்து காரில் இருந்தவர்கள் சுதாரித்துக் கொண்டு காரை விட்டு கீழே இறங்கினர்.

அடுத்த சில நிமிடங்களிலேயே கார் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. இதையடுத்து அவ்வழியாக சென்ற தண்ணீர் லாரி மற்றும் தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வாகனம் ஆகியவற்றின் உதவியுடன் தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் காரின் முன்பக்கம் சேதமடைந்த நிலையில் விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |