சிம்ம ராசி அன்பர்களே…!!! இன்று நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாளாக இருக்கும். நாணய பாதிப்புகள் அகலும். வெளிவட்டார பழக்க வழக்கங்கள் விரிவடையும். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். இன்று கணவன் மனைவிக்கிடையே திடீர் மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும், கவனம் இருக்கட்டும். சற்று கவனமாக எதையும் செய்வது நல்லது. சிக்கனத்தைக் கடைப்பிடித்து, இன்று பொறுமையை கடைபிடித்து காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துமே சிறப்பாக இருக்கும். வீண் வாக்குவாதங்களை யாரிடமும் செய்ய வேண்டாம்.
யாருக்கும் பஞ்சாயத்துக்கள் எதுவும் பண்ண வேண்டாம். கூடுமானவரை இன்று பொறுமையை கையாளுங்கள். வெளியூர் பயணம் செல்லும் பொழுது மற்றவரிடம் பேச்சு கொடுப்பதை தவிர்ப்பதும், புதிய நபர்களை சந்திப்பதும் கொஞ்சம் நீங்கள் கவனமாகவே இருக்க வேண்டும். இன்று வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையாக செல்ல வேண்டும். இன்று வாகன யோகமும் இருக்கு. இருந்தாலும் புதிய முயற்சியை மட்டும் இன்று கைவிட வேண்டாம். இன்று மனசுக்கு குழப்பங்கள் ஏற்படக் கூடிய சம்பவங்கள் நடக்கும். தீர ஆலோசனை செய்து முக்கிய முடிவுகளை எடுங்கள் அது போதும்.
இன்று மாணவர்களுக்கு கல்வியில் கொஞ்சம் சிக்கலான சூழ்நிலை இருக்கும். குழப்ப நிலை காணப்படும். இன்று விடுமுறை நாளாக இருந்தாலும், நீங்கள் படித்த பாடத்தை சிறப்பாக படியுங்கள், எழுதிப் பாருங்கள், நினைவில் வைத்துக் கொள்வதற்கு உதவும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிஷ்ட எண் : 4 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்