தெலுங்கானாவில் கொரோனாவால் உயிரிழந்த வாலிபர் இறப்பதற்கு முன் தனது அப்பாவிற்கு வீடியோ ஒன்றை பதிவு செய்து அனுப்பியுள்ளார்.
தெலுங்கானா மேட்ச்சல் என்னும் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அங்குள்ள அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட அவர் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இறப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன் செல்பி வீடியோ ஒன்றையும் எடுத்து தனது அப்பாவுக்கு அனுப்பியதோடு, சமூக வலைதளத்திலும் பதிவிட்டுள்ளார். பதிவிட்ட சில மணி நேரங்களில் அவர் உயிரிழந்துள்ளார்.
அந்த வீடியோவில் அவர் பேசியதாவது, நடந்த மூன்று மணி நேரத்திற்கும் மேலாக மூச்சு வாங்குவதற்கு சிரமப்படுவதாகவும் மருத்துவர்களை உதவிக்கு அழைத்தும் யாரும் தன்னை கண்டுகொள்ளவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் இதயத்துடிப்பு நிற்பது போல் உள்ளது. மூச்சு விட மிகவும் சிரமமாக உள்ளது. என்று குறிப்பிட்ட அவர், எல்லாம் முடிந்தது bye டாடி bye அனைவருக்கும் குட் bye என்று சொல்லி வீடியோவை முடித்துள்ளார். இவரது வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக தெலுங்கானா மாநில மருத்துவர்களின் சிகிச்சை முறை குறித்து மக்கள் மத்தியில் அச்சமும் கேள்வியும் எழுந்துள்ளது.