Categories
அரசியல் மாநில செய்திகள்

“தங்க கவசத்துக்கு குட்பை”…. புது தெம்பில் ஓபிஎஸ்…. சிக்கலில் சசிகலா, இபிஎஸ்….‌. தெற்கில் பறக்கப் போகும் கொடி….!!!!!

தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில், கடந்த 30-ம் தேதி நடைபெற்ற தேவர் ஜெயந்தி விழாவின்போது முத்துராமலிங்க தேவருக்கு அணிவிக்கப்படும் தங்க கவசத்திற்கு ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பு கடுமையாக போட்டி போட்டனர். இபிஎஸ் தரப்பு பொருளாளர் சென்ற முறையில் திண்டுக்கல் சீனிவாசனும், அதிமுக கட்சியின் பொருளாளர் தான்தான் என்று கூறும் ஓபிஎஸ்-ம் மதுரையில் உள்ள ஹைகோர்ட்டில் தங்க கவசம் தொடர்பாக வழக்கு தொடர்ந்தனர்‌.

இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதி சட்டம் ஒழுங்கு பாதுகாப்பை கருத்தில் கொண்டு டிஆர்ஓ-விடம் தங்க கவசத்தை ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார். இது ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பு இருவருக்குமே பின்னடைவாக அமைந்த நிலையில், இபிஎஸ் கடைசி நேரத்தில் பசும்பொன் பயணத்தை ரத்து செய்து கொண்டார்.

ஆனால் ஓபிஎஸ் தன்னுடைய ஆதரவாளர்களுடன் பசும்பொன் நகருக்கு சென்று முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார். அப்போது யாரும் எதிர்பார்க்காத புதிய டுவிஸ்ட்டாக 10 கிலோ 400 கிராம் மதிப்பிலான வெள்ளி கவசத்தை முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு ஓபிஎஸ் வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

இதை இபிஎஸ் உட்பட அரசியல் கட்சிகள் யாருமே எதிர்பார்க்காத நிலையில், ஓபிஎஸ் கொடுத்த வெள்ளி கவசமானது மாதம் தோறும் வரும் பௌர்ணமி மற்றும் இதர சுப தினங்களில் அணிவிக்கப்படும்  என்று கூறப்பட்டது. வருடத்திற்கு ஒருமுறைதான் தேவர் ஜெயந்தியின் போது அணிவிக்கப்படும் தங்க கவசத்தை விட மாதம் தோறும் அணிவிக்கப்படும் வெள்ளிக்கவசம் பேசு பொருளாக மாறும் என்று கூறப்படுகிறது.

இதனால் தெற்கில் ஓபிஎஸ் கொடி பறக்க வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப் படுகிறது. இந்நிலையில் அம்மா ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கையில் சசிகலாவின் பெயர் பிரதானமாக இருப்பதால் ஓபிஎஸ்  அவருடன் இருக்கும் கூட்டணியை கைவிடுவாரா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. அதோடு தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் இபிஸ்க்கு சிக்கல் வரும் என்று கூறப்படுகிறது.

மேலும் அதிமுக கட்சி தங்களுக்கு தான் சொந்தம் என்று கூறும் சசிகலா அம்மா ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கில் சிக்கி இருப்பதாலும், எடப்பாடி தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்கில் சிக்கி இருப்பதாலும் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் ஓபிஎஸ்-ன் பக்கம் ஓரளவு தாக்கம் இருக்கக்கூடும் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.

Categories

Tech |