Categories
தேசிய செய்திகள்

இனி கள்ள ஒட்டுக்கு குட்பை – வாக்காளர்களின் ஃபேஸ் ஸ்கேன் செய்யும் தெலுங்கானா!

 மேட்சல் மல்காஜ்கிரி மாவட்டத்தில் வாக்காளர்களின் முகங்களை ஸ்கேன் செய்த பிறகே ஒட்டு போட வைக்கும் சோதனை முயற்சியை தெலங்கானா தேர்தல் அலுவலர்கள் அறிமுகம் செய்துள்ளனர்.

தெலங்கானா மாநிலம் மேட்சல் மல்கஜ்கிரி மாவட்டத்தில் வாக்காளர்களின் முகங்களை ஸ்கேன் செய்த பிறகே ஒட்டு போடவைக்கும் முறையை முதல்முறையாக தெலுங்கானா அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இங்கு தேர்தல் அலுவலர்கள் செல்போன் செயலி மூலம் வாக்காளர்களின் முகங்களை ஸ்கேன் செய்கின்றனர். அடுத்த நொடியே, இந்த வாக்கு சாவடியில் ஒட்டு உள்ளதா, ஏற்கனவே ஒட்டு போட்டு விட்டார்களா என்ற அனைத்து தகவல்களும் டிஸ்பிளேவில் வருகிறது. இந்த சோதனை முயற்சி வெற்றி பெற்றால், நாட்டில் நடைபெறும் தேர்தல்களில் கள்ள ஒட்டுப் பதிவாவதை முற்றிலுமாக தவிர்க்க முடியும் என அலுவலர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தேர்தல் அலுவலர் கூறுகையில், இந்த சோதனை முயற்சி முதல்கட்டமாக மேட்சல் மல்கஜ்கிரி மாவட்டத்தின் கோம்பள்ளி நகராட்சியில் தேர்ந்தெடுக்கபட்டுள்ள 10 வாக்கு சாவடிகளில் அறிமுகம் செய்துள்ளோம். இங்கு எடுக்கப்படும் புகைப்படங்கள் உடனடியாக அழிக்கப்படும். அவற்றை சேமித்து வைக்கும் நோக்கில் செயலி உருவாக்கப்படவில்லை. இதன் மூலம் தேர்தலில் பதிவாகும் கள்ள ஒட்டுகளை கட்டுப்படுத்தமுடியும்” என்றார்.

Categories

Tech |