இந்தியாவுடன் இணைந்து ஆக்ஸ்போர்ட் பல்கலை உருவாக்கியுள்ள கொரோனாவு தடுப்பூசிக்கான பரிசோதனை இன்று தொடங்கியது.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழகத்திலும் ஊரடங்கில் தளர்வுகளை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன் பாதிப்பை பல்வேறு முறையில் அரசு சிறப்பாக கட்டுபடுத்தி வந்தாலும், மக்கள் மத்தியில் இதற்கான தடுப்பு ஊசி எப்போது நடைமுறைக்கு வரும் என்ற எண்ணமே அதிகம் காணப்படுகின்றது.
இந்நிலையில் இந்தியாவுடன் இணைந்து பல்கலை கண்டுபிடித்த கோவிஷீல்டு தடுப்பூசிக்கான பரிசோதனைஇன்று தொடங்கியது. இந்தியா முழுவதிலும் 16 இடங்களில் பரிசோதனை நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மற்றும் போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் பரிசோதனை நடந்து வருகிறது. விரைவில் நல்ல தகவல் கிடைக்க வேண்டும் என நாடு முழுவதும் உள்ள மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.