விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டார். இதில், 601 பயனாளிகளுக்கு இரண்டு கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் சந்திரபிரபா, சாத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜவர்மன் ஆகியோர் கலந்துகொண்டனர். இதன் பின்னர் கூட்டத்தில் பேசிய ராஜேந்திர பாலாஜி, ஏழை எளியோருக்கு பட்டா கொடுத்தீர்கள் என்றால் உங்கள் பிள்ளை குட்டிகள் நன்றாக இருக்கும் என வட்டாட்சியர்களை வாழ்த்தினார்.
ஏழை, எளிய மக்களுக்கு செய்கின்ற உதவி இறைவனுக்கு செய்யும் வழிபாடு என நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தெரிவித்துள்ளார். எந்த மதமாக இருந்தாலும் ஏழைகளுக்கு செய்யும் உதவி இறைவனுக்கும் செய்யும் வழிபாடு என்று கூறினார்.இதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “மக்கள் எங்கள் பக்கள் உள்ளதால், நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில், நல்லாட்சி நாயகன் எடப்பாடி பழனிசாமிக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில், தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் வெற்றிபெறுவோம்.விருதுநகர் மாவட்டம் அதிமுகவின் எஃகு கோட்டை என்பதை நிரூபிப்போம்” என்று சூளுரைத்தார்.