Categories
பல்சுவை

“தீராத காதல் கொண்டேன்” அதுவே என்னை இங்கு நிற்க வைத்துள்ளது – கூகுள் CEO சுந்தர் பிச்சை

தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விதமாக உலக அளவில் உயர்ந்த இடத்தில் இருக்கும் தமிழன் சுந்தர் பிச்சை, கூகுள் நிறுவனத்தின் CEO ஆக இருப்பது மட்டுமல்லாது அதன் தாய் நிறுவனமான அல்ஃபாபெட்டின் தலைமைப் பொறுப்பையும் ஏற்றுள்ளார். இத்தகைய உயர்ந்த இடத்தில் இருக்கும் சுந்தர்பிச்சை வாழ்வில் பல இன்னல்களை சந்தித்த பிறகு வெற்றி பெற்றார் என்பது யூடியூப் நடத்திய Dear Class of 2020 என்ற நிகழ்ச்சி மூலம் தெரிய வந்துள்ளது. இந்நிகழ்ச்சி சாதனை படைத்தவர்களின் கடந்த காலத்தை வெளியிட்டு வந்தது. அதில் பல சாதனையாளர்கள் தங்களது வெற்றிக் கதைகளையும், கடந்து வந்த பாதையையும்  கூறிவந்துள்ளனர்.

அவ்வகையில் கூகுள் நிறுவன CEO சுந்தர் பிச்சை இளைஞர்களுக்கு ஊக்கத்தை கொடுக்கும் விதமாக பல தகவல்களை பகிர்ந்துள்ளார். குறிப்பாக அவர் முதன்முதலாக அமெரிக்கா வந்த சம்பவம் குறித்து பேசுகையில், “27 ஆண்டுகளுக்கு முன்பு நான் படிக்க அமெரிக்கா வருவதற்கான விமான டிக்கெட் கட்டணத்திற்கு எனது தந்தை அவரது ஒரு வருட சம்பளத்தை செலவு செய்தார்.

அமெரிக்கா அதிக செலவு மிகுந்த நாடு ஆகும். படிக்க வந்த நான் வீட்டிற்கு ஒரு நிமிடம் பேச வேண்டும் என்றாலும் 2 டாலர்களுக்கு மேல் செலவாகிவிடும். அப்படி ஒரு சூழ்நிலையில் இருந்த நான் இப்போது இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன் என்றால், அதை அதிர்ஷ்டம் என்று சொல்லிவிட முடியாது அதையும் தாண்டி தொழில்நுட்பம் மீது எனக்கு இருந்த தீராத காதல் தான்” எனக் கூறியுள்ளார்.

Categories

Tech |