Categories
அரசியல் உலக செய்திகள்

கூகுள் CEO சுந்தர் பிச்சைக்கு பத்மபூஷன் விருது…. அமெரிக்காவின் வழங்கப்பட்டது…!!!

கூகுள் நிறுவனத்தினுடைய CEO சுந்தர் பிச்சைக்கு இந்திய அரசு பத்மபூஷன் விருது வழங்கி கௌரவித்துள்ளது.

இந்திய நாட்டின் குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த வருடத்திற்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டவர்களுக்கு முன்பே வழங்கப்பட்டு விட்டன. ஆனால், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு வழங்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது அமெரிக்க நாட்டின் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பத்மபூஷன் விருது வழங்கப்பட்டிருக்கிறது.

இந்திய நாட்டின் சார்பாக அமெரிக்க நாட்டிற்கான இந்திய தூதராக இருக்கும் தரன்ஜித் சிங் சந்து சுந்தர் பிச்சைக்கு பத்மபூஷன் விருதை வழங்கினார். விருதை பெற்றுக் கொண்ட சுந்தர் பிச்சை பேசியதாவது, சிறப்புமிக்க விருதை வழங்கிய இந்திய அரசாங்கம் மற்றும் மக்களுக்கு மனப்பூர்வமான நன்றிகள், இந்திய தூதர் தரம்ஜித் சிங் சந்துவிற்கு நன்றிகள், என் குடும்பத்தினரின் முன்னிலையில் பத்மபூஷன் விருதை பெற்றுக் கொள்வது மிகப்பெரிய கௌரவமாக இருக்கிறது.

என்னை மேம்படுத்திய நாட்டிலிருந்து இந்த சிறப்பு கிடைப்பதில் மகிழ்ச்சி. என்னோடு எந்த நிலையிலும் இந்தியா இருக்கும். எங்கு சென்றாலும் இந்தியாவை என்னோடு எடுத்துச் செல்வேன். ஒவ்வொரு தடவை இந்திய நாட்டிற்கு வரும்போதும் டிஜிட்டல் துறை வளர்ச்சி பெற்றிருப்பது வியக்க செய்கிறது என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |