Google Chrome ல் ஏற்பட்டுள்ள குறைபாடு மற்றும் அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான வழிமுறைகளை பார்க்கலாம்.
Google Chrome Browser ல் முக்கிய குறைபாடுகள் ஏற்பட்டுள்ளதாக CERT-IN முக்கிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் அதிக பிழைகள் நிறைந்த Chrome பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மென்பொருளில் கண்டறியப்பட்டுள்ள புதிய பிழை Google Chrome Version 101.0.4951.41 மற்றும் அதற்கு முன்பு வெளியான அப்டேட்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது.
இதன் மூலமாக ஹேக்கர்கள் போனில் இருக்கும் முக்கிய தகவல்களை அறிந்து கொள்ள முடியும். இதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு Google Chrome Version 101.0.4951.41 ஐ அப்டேட் செய்ய வேண்டும். ஆனால் இதற்கு முன்பு வெளியான வெர்சன்களை பயன்படுத்தி ஹேக்கர்கள் எளிதாக தகவல்களை தெரிந்து கொள்ள முடியும். இந்தக் குறைபாடை Google நிறுவனமும் ஒப்புக்கொண்டுள்ளது.