உலகம் முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு இருக்கிறது. இணையதளம் இயக்கம் இன்றி உலகத்தின் இயக்கம் இல்லை என்ற நிலை மாறிவிட்டது. இருந்தாலும் இணையத்தில் அனைத்து பயன்பாடுகளும் நடந்தாலும் அதில் எதற்கும் பாதுகாப்பு இல்லை என்பது உண்மைதான். இதில் பயனாளர்களுக்கு ரிஸ்க் என்பது ரொம்பவே அதிகம். அந்த அடிப்படையில் பிரைவசி அச்சுறுத்தல் என்பது தற்போது வழக்கபோல் ஆகிவிட்டது.
உலகளவில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வரும் பிரவுசர்களில் ஒன்றுதான் கூகுள் ஆகும். அந்த பிரவுசரில் பயனாளர்கள் தேடும் அனைத்தும் அதன் சர்வரில் சேமிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது. அத்துடன் பயனாளர்கள் இந்த ஆபத்தில் இருந்து பாதுகாத்துகொள்ள History யை டெலிட் செய்வது அவசியம் என்று கூறப்படுகிறது. கூகுளில் சர்ச் ஹிஸ்டரியை டெலிட் செய்ய ஈஸியான வழிமுறைகள் இருக்கின்றன.
ஐபோன் பயனர்கள்
# முதலாவதாக கூகுள் மை ஆக்ட்டிவிட்டிக்கு செல்ல வேண்டும்.
# அவற்றில் பயனாளர்களின் அனைத்து ஹிஸ்டரி விபரங்களும் இருக்கும். அதில் டெலீட் ஆக்டிவிட்டி என்று இருக்கும். அதனை டேப் செய்ய வேண்டும்.
# பின்னர் ஆல் டைம் என்பதனை டேப் செய்யவும். அதனை தொடர்ந்து நெக்ஸ்ட் என்பதனை தேர்வு செய்து டெலீட் கொடுத்தால் அனைத்து சர்ச் ஹிஸ்டரியும் டெலிட் ஆகிவிடும். மேலும் ஆட்டோமெட்டிக் டெலீட் ஆப்ஷனும் இருக்கின்றன.
ஆண்ட்ராய்டு பயனர்கள்
# குரோம் அப்ளிகேஷனை ஓபன் செய்யவும்.
# அதில் வலதுபுறம் மேல் உள்ள 3 டாட்களை (Vertical Dots) கிளிக் செய்து, ஹிஸ்டரியை தேர்வு செய்ய வேண்டும். பின் கிளியர் பிரவுசிங் டேட்டாவை தேர்வு செய்ய வேண்டும்.
# பேஸிக் மற்றும் அட்வான்ஸ்டு என்று 2 டேப் இருக்கும். அவற்றில் கடந்த 1 மணி நேரம், 24 மணி நேரம், கடந்த 7 நாட்கள், கடந்த 4 வாரம், ஆல் டைம் என்று ஆப்ஷன் இருக்கும்.
# அதில் பயனர்கள் தங்களுக்கு தேவையானதை தேர்வு செய்து க்ளியர் டேட்டா-வை டேப் செய்தால் அனைத்தும் டெலிட் ஆகிவிடும்.