Categories
உலக செய்திகள்

கூகுள், பேஸ்புக் சமூகவலைதளங்கள் மீது …. வழக்கு தொடர்ந்து ரஷ்யா அதிரடி …!!!

சர்ச்சைகுரிய பதிவுகள்  நீக்கப்படாததால்  கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட  சமூகவலைதள நிறுவனங்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ரஷ்ய நாட்டில் கூகுள் , ட்விட்டர் , பேஸ்புக் மற்றும் டெலிகிராம் போன்ற சமூக வலைதளங்களுக்கு கடந்த சில நாட்களாகவே  கட்டுப்பாடுகள் அதிகரித்து வருகிறது . குறிப்பாக ரஷ்ய நாட்டின்  உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீட்டை தடுக்க இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது . இந்த நிலையில் சர்ச்சைகுரிய பதிவுகள்  நீக்கப்படாததால்  ரஷ்ய அரசு இந்த சமூக வலைதளங்களில் மீது  நீதிமன்றத்தில் 3  வழக்குகளை தொடர்ந்துள்ளது. இதில் கூகுள் நிறுவனத்தின் மீது தொடரப்பட்ட வழக்கு நிரூபணமானால் இந்திய மதிப்பில் ரூபாய் 1 கோடியே    23 லட்சம் அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் .

அதேபோன்று டெலிகிராம் நிறுவனத்தின் மீதும் 3 புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த புகார்  நிரூபணமானால் இந்திய மதிப்பில் ரூபாய் 1 கோடியே 64 லட்சம் அபராதம் செலுத்த நேரிடும். இதையடுத்து ட்விட்டர் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் மீதும் தலா 2 புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதால் இந்த நிறுவனங்களிடமிருந்து தலா ரூபாய் 82 லட்சம் அபராதமும்  அதன் சேவை வேகம் குறைப்பையும் சந்திக்க நேரிடலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Categories

Tech |