Categories
உலக செய்திகள்

கூகுள், ஃபேஸ்புக், பெட்டர் உள்ளிட்ட சமூக வலைத் தளங்கள் மீது வழக்கு… ரஷ்யா அதிரடி புகார்…!!!

நாட்டில் சட்ட விரோத போராட்டத்தை தூண்டும் வகையிலான பதிவுகளை நீக்காத காரணத்தால் கூகுள், பேஸ்புக் மற்றும் ட்விட்டர் நிறுவனங்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை விமர்சனம் செய்துவரும் அலெக்ஸ் நவல்னியை என்ற முக்கிய விமர்சகரை கடந்த மாதம்  சிறையில் அடைத்தனர் .இதனால் ரஷ்ய நாடு முழுவதும் அவருக்காக ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். அவற்றில் குழந்தைகளை ஊக்குவிக்கும் விதமாக சட்டவிரோதமான ஆர்ப்பாட்டங்களுக்கு பங்கேற்குமாறு அளிக்கப்பட்ட பதிவுகளை நீக்க தவறிய 5 சமூக ஊடக நிறுவனங்களின் மீது ரஷ்ய அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதில் கூகுள் ஃபேஸ்புக் ட்விட்டர் ஆகிய ஒவ்வொன்றின் மேலும்  தலா மூன்று வழக்கு பதிவுகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் வழக்கில் சட்டவிதிகளை மீறியது நிரூபிக்கப்பட்டால் ரூ . 3943485 வரை அவதாரம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மேலும் முக்கியமான டிக் டாக் டெலகிராம் போன்றவைகளின் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

Categories

Tech |