கூகுள் ஒன் என்ற புதிய சேவையை கூகுள் நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது
கூகுள் நிறுவனம் தனது கூகுள் ஒன் சேவையை அனைத்து பயனர்களுக்கும் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் ஸ்மார்ட்போனில் உள்ள போட்டோக்கள், வீடியோக்கள் உள்ளிட்ட தகவல்களை ஆன்லைனிலேயே சேமித்துக்கொள்ளலாம். சுமார் 15 GB வரையிலான சேமிப்பு வசதி இலவசமாக வழங்கப்பட்டு உள்ளது.
இதில் உள்ள ஸ்டோர் மேனேஜர் மூலம் தகவல்களை ஒழுங்குபடுத்த முடியும். ஏற்கனவே கூகுள் நிறுவனத்தின் மற்றொரு பிரதான கூகுள் ட்ரைவ் என்னும் செயலியில் இதேபோல ஆன்லைனின் தகவல்களை சேமிப்பதற்கான வசதி உள்ளது. அதிலும் 15 ஜிபி வரையிலான தகவல்களை சேமித்து வைத்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து இதுபோன்று தனது வாடிக்கையாளர்களை கவரும் விதமாக கூகுள் புதுப்புது வசதிகளை ஏற்படுத்தித் தருவதே காலத்திற்கும் அழியாத தொழில்நுட்பமாக நிலைத்து நிற்பதற்கு காரணமாக இருக்கிறது என அதனுடைய ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.