Categories
தேசிய செய்திகள்

“இந்தியாவில் பெண்களால் நடத்தப்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் கூகுள் முதலீடு…. சுந்தர் பிச்சை தகவல்….!!!!

இந்தியாவுக்கு கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை வந்துள்ளார். இவர் மத்திய தொழில்நுட்பத் துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோரை டெல்லியில் வைத்து சந்தித்து பேசியுள்ளார். அதன் பிறகு இந்தியா 2022-க்கான google என்ற நிகழ்விலும் சுந்தர் பிச்சை கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, இந்திய டிஜிட்டல் மயமாக்கல் நிதியத்தின் ஒரு பகுதி இந்தியாவில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் அதிக கவனம் செலுத்துகிறது.

இந்த நிதியில் இருந்து 75 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 600 கோடி பெண்களால் நடத்தப்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்யப்படும். உலகெங்கிலும் உள்ள மக்களிடம் தொழில்நுட்பம் பெரிய அளவில் செயல்பட்டு மக்களின் வாழ்க்கையை தொடுகிறது. இந்தியாவும் ஒரு பெரிய ஏற்றுமதி பொருளாதாரா நாடக இருக்கும். இது ஒரு முக்கியமான தருணமாக இருக்கிறது என்று கூறினார். மேலும் பிரதமர் மோடியை சந்தித்தபோது பேசிய சுவாரசியமான நிகழ்வுகளையும் தன்னுடைய twitter பக்கத்தில் மிகவும் மகிழ்ச்சியோடு பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |