Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் தர்ஷன் நடிக்கும் ”கூகுள் குட்டப்பா”….. அவரே வெளியிட்ட அப்டேட்….!!

‘கூகுள் குட்டப்பா’ படத்தின் பாடல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் சீசன் 3. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் மக்களிடைய பிரபலமானவர் தர்ஷன். இவர் தற்போது கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ”கூகுள் குட்டப்பா”. இந்த படத்தில் லாஸ்லியா, கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தர்ஷன், லாஸ்லியாவின் 'கூகுள் குட்டப்பா'… செம ரகளையான டீசர் இதோ…!!! –  ATHIRVU.COM

இதனையடுத்து, ஆர்.வி ஒளிப்பதிவு செய்த இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இந்த படத்தின் பாடல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் எமோஷனலான ‘யாரோ யாரோ’ என்ற பாடலை பிரதீப்குமார் பாடி இருப்பதாக தர்ஷன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். விரைவில் இந்த பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |