கூகுள் பே மக்களுக்கு அதிக கேஷ் பேக் வழங்குகிறது.
கடந்த காலங்களில் மக்கள் கையில் பணத்தை கடைக்கு கொண்டு சென்று தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவார்கள். ஆனால் தற்போது 100 ரூபாய் பொருளானாலும், 1000 ரூபாய் பொருளானாலும் சரி கடைக்காரர்களிடம் கூகுள் பே பண்ணிடவா என்று கேட்கின்றனர். இதனால் மக்கள் கையில் காசு வைத்துக் கொள்ளும் பழக்கத்தையே மறந்து விட்டனர். இந்நிலையில் காலங்கள் செல்ல செல்ல பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் தான் அதிகம் வருகிறது. அதேபோல் கூகுள் பேயில் அதிக அளவில் கேஷ்பேக் வாங்கவும் வழிகள் உள்ளது. இந்நிலையில் கூகுள் பேவில் பணம் பரிமாற்றம் செய்ய பல்வேறு திட்டங்கள் உள்ளது. நீங்கள் ரீசார்ஜ் செய்ய வேறொரு செயலி அல்லது இணையதளத்தில் இருந்து பணம் செலுத்த மட்டும் கூகுள் பேவிற்கு வரலாம்.
பின்னர் இந்த செயலிலேயே ரீசார்ஜ், மின்சார பில், கேஸ் பில் என இதில் கணக்கை இணைத்துக் கொண்டு பணம் செலுத்தினால் அந்த பரிவர்த்தனைகளுக்கு உங்களுக்கு கேஷ்பேக் உண்டு. மேலும் கூகுள் பே செயலியில் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்குகளை இணைக்க முடியும். இந்நிலையில் ஒரு வங்கி கணக்கு மூலம் பணம் அனுப்பினால் குறைந்த அளவு தான் கேஷ்பேக் கிடைக்கும். ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்கில் இருந்து பணம் பரிமாற்றம் செய்தால் அதிக அளவில் கிடைக்கும் . அதேபோல் பணம் யாருக்கு செலுத்துகிறோமோ அவர் வேறு வேறு கணக்குகள் வைத்திருந்தால் மாற்றி மாற்றி அனுப்பலாம். இதன் மூலம் இருவருக்கும் கேஷ்பேக் கிடைக்கும். மேலும் அதிக கேஷ்பேக் சலுகைகள் வேண்டும் என்று அதிக தொகைகளை பரிவர்த்தனை செய்யக்கூடாது. குறைந்த தொகை பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இந்த ஆஃபர் வழங்கப்படுகிறது. அதேபோல் எரிவாயு சிலிண்டர் கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை இதன் மூலம் செலுத்தும் போது அதிக கேஷ்பேக் கிடைக்கும்.