Categories
டெக்னாலஜி பல்சுவை

Google pay, phone pe, Amazon pay யூஸ் பண்றீங்களா… இனி கூடுதல் கட்டணம்… வெளியான புதிய அறிவிப்பு…!!!

யுபிஐ பரிவர்த்தனை தொடர்பாக எவ்வித கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படாது என்று அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாட்டில் உள்ள அனைவரும் பணப்பரிவர்த்தனைக்காக மொபைல் செயலிகளையே பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை நடத்தும் செயலிகள், ஒட்டுமொத்த பரிவர்த்தனையில் 30 சதவீதம் என்ற அளவுக்கு மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடியும் என்ற கட்டுப்பாட்டை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதனால் ஜனவரி 1 முதல் செய்யப்படும் பணம் பரிவர்த்தனைக்கு நாடு முழுவதிலும் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படும். இது கூகுள் பே, அமேசான் பேய் மற்றும் போன்பே போன்ற நிறுவனங்களின் நுகர்வோரை நிச்சயம் பாதிக்கும் இந்த அறிவிப்பு பேடிஎம் – ஐ பாதிக்காது என்று தெரிவித்தது.

இந்நிலையில் யுபிஐ பரிவர்த்தனை தொடர்பாக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று national payment corporation of India விளக்கம் அளித்துள்ளது. ஜனவரி 1 முதல் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படும் என்ற செய்தி பரவிய நிலையில், வாடிக்கையாளர்கள் எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி கூகுள் பே, அமேசான் பே, போன் பே ஆகியவற்றில் முன்பு போலவே கட்டணமில்லாமல் பரிவர்த்தனை செய்யலாம் என தெரிவித்துள்ளது.

Categories

Tech |