Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வித்தியாசமான முறையில் வழிப்பறி… செல்போன் எண் மூலம்… சிக்கிய வழிப்பறி கொள்ளையர்கள்….!!

இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவரை வழிமறித்து கூகுள் பே செயலி மூலம் மிரட்டி பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தரமணி ரயில் நிலையம் அருகே உள்ள சாலையில் நெற்குன்றதை  சேர்ந்த ராஜா என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்ற போது திடீரென்று எட்டு பேர் கொண்ட கும்பல் அவரை வழி மறித்துள்ளது. பின்பு ராஜாவிடம்  கத்தியை காட்டி மிரட்டி 3000 ரூபாய் பணத்தையும் அவரது கை கடிகாரத்தையும் பறித்துக் கொண்டுள்ளனர். அதோடு மட்டுமல்லாது அவரது செல்போனையும் பறித்து அதில் உள்ள கூகுள் பே செயலின் மூலம் 2000 ரூபாய் பணத்தை  ராஜாவின் அக்கவுண்டிலிருந்து அவரது நண்பரின் கூகுள் பே அக்கவுண்டிற்கு பரிமாற்றம் செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில்  ராஜா புகாரளித்தார்.

புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில் வழிப்பறி கொள்ளையர்களின் கூகுள் பே  அக்கவுண்டில்  உள்ள தொலை பேசி எண்ணை வைத்து  காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அதன் மூலம் சந்தோஷ்குமார், பாலமுருகன், பிரகாஷ்,விக்கி, கார்த்திக்,ஏழுமலை உள்ளிட்ட 8 பேரை கைது செய்து அவர்களிடமிருந்த ராஜாவின் கை கடிகாரத்தையும் அவரது பணத்தையும் மீட்டனர். மேலும்  கைது செய்யப் பட்ட 8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வாறு பண பரிவர்த்தனை செயலி மூலம் மிரட்டி யாராவது நம்முடைய பணத்தை பறித்தால் உடனடியாக அருகில் உள்ள சைபர் காவல் நிலையத்தை அணுகினால் பணபரிவர்த்தனையை நிச்சயமாக தடுக்க முடியும்  என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |