உலக அளவில் உள்ள ஏராளமான மக்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதில் கூகுள் தேடல் வசதியை கோடிக்கணக்கானோர் பயன்படுத்துகின்றனர். இந்த கூகுள் தேடல் செயலியில் தற்போது புதிய வசதியை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது மல்டி சர்ச் என்ற ஆப்ஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆப்ஷனை பயன்படுத்தி நாம் ஒரே நேரத்தில் பல்வேறு விஷயங்களை தேடலாம். இதில் நாம் இமேஜ் மற்றும் வாக்கியங்கள் மூலமாக கூட தேடி கொள்ளலாம். இந்நிலையில் கூகுள் செயலியில் நாம் ஆங்கிலம் தவிர உலகில் உள்ள 70 மொழிகளில் பல்வேறு விஷயங்களை தேடிக் கொள்ளலாம் எனவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த மல்டி சர்ச் ஆப்ஷனுடன் கூகுள் லென்ஸ் வசதியும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கூகுள் லென்ஸை 8 மில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாகத்தான் கூகுள் லென்ஸ் வசதியும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து ஐ போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கும் அவர்களுடைய ஐஓஎஸ் செயலிகளில் கூகுள் தேடல் மேம்படுத்தப்பட்டுள்ளது. கூகுளில் ஒருவர் ஒரு விஷயத்தை தேடும்போது அதில் சம்பந்தப்பட்ட படங்களை காட்டுவதை விட, தேடல் சம்பந்தமான முக்கிய சுற்றுலா தளங்கள், இடம், புகைப்படம், வீடியோ போன்றவற்றையும் காட்டும் விதத்தில் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது.
இதேபோன்று ஒருவர் பிடித்தமான உணவுகளை தேடும்போது அந்த உணவை மட்டும் காட்டாமல் அந்த உணவு எந்த உணவகத்தில் கிடைக்கும் என்பதையும், நீங்கள் தேடியது போன்ற வேறு ஏதாவது உணவுகள் இருந்தாலும் அதையும் சேர்த்து காட்டும். மேலும் மேம்படுத்தப்பட்ட கூகுள் மேப் வசதி டோக்கியோ, சான் பிரான்சிஸ்கோ, நியூ யார்க், லண்டன், லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட சில குறிப்பிட்ட நகரங்களில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இந்த கூகுள் மேப்பில் 250-க்கும் மேற்பட்ட உண்மையான இடத்தை போல் இருக்கும் போட்டோக்களை மிகவும் கூர்மையாக இனி பார்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சேவையானது கூடிய விரைவில் வெளியாகும்.