இணைய உலகின் பிரபலமான தேடு பொறியான கூகுள் நிறுவனத்தின் சேவைகள் திடீரென முடங்கியதால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்கள் பாதிக்கப்பட்டனர்.
கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் திடீரென முடங்கியதால் அதனை லாகின் செய்யவோ செய்திகளை அனுப்பவோ பெறவோ முடியவில்லை. இதனால் ஜிமெயில் சார்ந்து இயங்கும் கூகுள் மீட்ஸ் செயலியில் ரெக்கார்டிங் செய்யவோ கூகுள் ட்ரைவில் பைல்களை உருவாக்கவோ கூகுள் சாட்டில் செய்திகளை அனுப்பவோ முடியவில்லை.
இதன் காரணமாக இந்தியா உட்பட உலகம் முழுவதும் கோடிக்கணக்கான கூகுள் பயனாளர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். கூகுள் நிறுவனத்தின் துரித நடவடிக்கையால் சில மணி நேரத்திற்குப் பிறகு ஜிமெயில் உள்ளிட்ட அதன் செய்வைகள் மீண்டும் கிடைத்தன. சேவைகள் முடங்கியது தொடர்பாக டிவிட்டர் போன்ற சமூக வலைதளதில் நெட்டிசன்கள் ஹஸ்டகுகளை உருவாக்கி கவலைகளை பகிர்ந்தனர். இது சர்வதேச அளவில் வைரல் ஆனது.