Categories
உலக செய்திகள்

காலியானது கூகுள் நிறுவனத்தின் CEO பதவி… போட்டி போட்டு குவியும் விண்ணப்பங்கள்..!!

கூகுள் நிறுவனத்தின் CEO பதவி காலியாக இருப்பதாக வெளியான தகவலை தொடர்ந்து அப்பதவிக்கு ஏராளமானோர் விண்ணப்பித்தனர்.

உலக அளவில் facebook whatsapp twitter உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இன்டர்நெட் பயன்பாட்டாளர்கள்  மத்தியில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சமூக வலைதளங்களுக்கு அடுத்தபடியாக ஜிமெயில், linkedin உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் சார்ந்த விவரம் உள்ளிட்ட பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

Image result for google ceo post

அதிலும் linkedin சமூகவலைத்தளம்  பெரிய கம்பெனிகளில் வேலை வாய்ப்பை பெற்றுத் தருவதில் பிரபலமாக இருந்து வந்தது. அதன்படி பெரிய கம்பெனிகளின் அதிகாரபூர்வ பக்கத்தில் வேலை வாய்ப்புகள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்படும். பின் படித்த பட்டதாரிகள் அந்த பணிக்கு விண்ணப்பிப்பர். இவ்வாறு இருக்கையில்,

Image result for google ceo post

சமீபத்தில் கூகுள் நிறுவனத்தின் CEO பதவி காலியாக இருப்பதாக போலி தகவல் ஒன்று வெளியானதை அடுத்து, அப்பதவிக்கு பல்வேறு விண்ணப்பங்கள் குவிந்தவண்ணம் இருந்தனர். இது சமூக வலைத்தளத்தில் வைரலாக அதிர்ச்சியடைந்த கூகுள் நிறுவனம் மற்றும் linkedin சமூக வலைதளம் இது பொய்யான தகவல் என்று அறிவித்தது. மேலும் இதுபோன்ற பொய்யான தகவல்கள் linkedinஇன் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டது. இதுபோன்ற செயல்களை தவிர்க்குமாறு அந்நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |