Categories
உலக செய்திகள்

கூகுளின் வாஸி நேவிகேஷன் ஆப் …. சிஇஓ-வாக இந்திய பெண் நியமனம் …!!!

வாஸி நேவிகேஷன் ஆப்பின் தலைமை நிர்வாகியாக இந்திய  வம்சாவளியை சேர்ந்த நேஹா பாரிக் நியமிக்கப்பட்டுள்ளார்.

கூகுள் நிறுவனத்தின் வாஸி நேவிகேஷன் ஆப்பின் தலைமை நிர்வாகியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த நேஹா பாரிக் என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பயண வெப்சைட்டான ஹாட்வொயரின் முன்னாள் அமெரிக்க இந்திய தலைவராக இருந்த நிலையில், தற்போது வாஸி நேவிகேஷன் ஆப்பின்   தலைமை நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஆப்பின் சிஇஓ-வாக இருந்த  நோம் பார்டின் கடந்த நவம்பர் மாதத்தில் பதவி விலகியதை தொடர்ந்து நேஹா பாரிக் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்பாக நேஹா ஹோட்டல்ஸ்.காம் மற்றும் ஹாட்வொயிர் வெப்சைட்டில் இளம் வயதில் முதல் பெண் தலைவராக பதவி வகித்துள்ளார். இந்த வாஸி ஆப் கடந்த 2008ஆம் ஆண்டு இஸ்ரேலின் உருவாக்கப்பட்டு, உபேர் மற்றும் லிப்ட் நிறுவன ஓட்டுநர்களின் வழிகாட்டிக்கான முதல் தேர்வாக வாஸி ஆப் உள்ளது. இந்த ஆப்பை கடந்த 2013 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனம் ரூபாய் 110 கோடிக்கு வாங்கியுள்ளது. தற்போது  185 நாடுகளில் மாதத்திற்கு 14 கோடி பயனாளர்களை கொண்டுள்ளது. இந்த வாஸி ஆப்  56 மொழிகளில்  வழிகாட்டுதலை வழங்குகிறது.

Categories

Tech |