Categories
பல்சுவை

“IMMUNITY” சளி… தொற்று நோயை விரட்டு… நெல்லிக்கனி….!!

நெல்லிக்கனியின் மருத்துவ குணம் குறித்த செய்தி தொகுப்பில் காண்போம்

சளி  ஃப்ளு கொரோனா உள்ளிட்ட வியாதிகளில்  இருந்து உங்களை நீங்கள் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றால், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சில காய்கறிகள் உணவு பொருள்களை  அன்றாட வாழ்வில் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவையாவும் உங்களை நோயிலிருந்து முற்றிலும் குணப்படுத்தும் என்று யாரும் கூறவில்லை. ஆனால் உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோயுடன் போராடி குணமாக்குவதற்கு ஓரளவு பங்கினை அது செலுத்தும். அந்த வகையில்,

நெல்லிக்கனியை நாம் எடுத்துக்கொள்ளலாம். நெல்லிக்கனியின் அவசியமும், அதனுடைய மருத்துவ குணமும் மற்ற நாட்டவர்களை விட நமக்கு அதிகம் தெரியும். இதிலுள்ள வைட்டமின் சி சத்து உடலில் உள்ள வெள்ளை அணுக்களை அதிகரித்து, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது. சளி உள்ளிட்ட தொற்று நோய்கள் வராமல் தடுக்க பெருமளவு உதவுகிறது.

Categories

Tech |