நெல்லிக்காய் அல்லது நெல்லிக்காய் ஜூஸை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் ஆழமான மருத்துவ நன்மைகளை பெறலாம்.
உடலில் உள்ள புரோட்டான்களின் அளவை அதிகரித்து கெட்ட கொழுப்புக்களை கரைத்து உடல் பருமன் ஆகாமல் தடுப்பதுடன் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
பிரீ ரடிகல் என்னும் புற்றுநோய் செல்களின் பாதிப்பிலிருந்து தடுத்து புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது.
நெல்லிக்காயில் விட்டமின் சி அதிகம் உள்ளது எனவே உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் உடலில் அதிகப்படியான சூட்டை குறைப்பதுடன் சரும செல்களுக்கு நல்ல பாதுகாப்பை அளித்து சரும அழகை அதிகரிக்கிறது.
நெல்லிக்காய் ஜூஸ் தேன் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து தினமும் குடித்து வந்தால் நீரிழிவு நோய் வராது.
கண் புரை, கண் எரிச்சல், கண் அரிப்பு, கண் சிவத்தல் போன்ற கண் தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளையும் வராமல் தடுத்து கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
இரப்பை கோளாறு, வயிற்றுப்போக்கு, பேதி, வயிற்றுப்புண் மற்றும் அசிடிட்டி போன்ற வயிற்று சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கிறது.
இதயத் தசைகளை வலிமையாக்கி ரத்த ஓட்டத்தை சீராக்கி இதய நோய்கள் மற்றும் வாய் துர்நாற்றம் போன்ற வாய் தொடர்பான பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
நெல்லிக்காய் ஜூஸில் ஜாதிக்காய் பொடி சேர்த்து கலந்து இரவு குடித்து வந்தால் நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.
நெல்லிக்காய் சாற்றில் சிறிது தேன் கலந்து இரண்டு வேளைகள் தினமும் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.