பாக்கியலட்சுமி சீரியலின் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ”பாக்கியலட்சுமி” சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனையடுத்து இந்த சீரியலின் நாளைய எபிசோடுகான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
இந்த ப்ரோமோவில் கோபி மற்றும் ராதிகா காரில் வந்து இறங்கும் போது தாத்தா ரோட்டில் கத்தி கலாய்க்கிறார். கோபி தாத்தா கோபி தாத்தா என சொல்ல சொல்ல கோபிக்கு கோபம் அதிகரிக்கிறது. இதனால் அவர் வீட்டுக்குச் சென்று கத்தியை எடுத்துக் கொண்டு கொலை செய்வதாக கூற, ராதிகா அவரை தடுத்து நிறுத்துகிறார். இந்த ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.