தந்தை பெரியாரின் கருத்துக்கள் கோபுரத்தில் வைக்கப்பட வேண்டியவை என்று துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை புத்தக கண்காட்சி நிறைவு விழாவில் கலந்து கொண்ட ஓ பன்னீர்செல்வம் புத்தக கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த அரங்குகளை பார்வையிட்டார். பின் கீழடி அகழாய்வு என வைக்கப்பட்ட பொருட்களை பார்வையிட்ட பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர்,
இளம் எழுத்தாளர்கள் தங்கள் சிந்தனைகளை நாட்டு மக்களுக்கு கற்று கொடுக்கும் பணியை எந்த சூழ்நிலையிலும் நிறுத்தக்கூடாது என்று கேட்டுக்கொண்டார். மேலும் தன்னை போன்றவர்கள் வாழக்கையில் உயரிய நிலையை அடைய தந்தை பெரியாரே காரணம் என்றும், பெரியாரின் கருத்துக்களை முழுமையாக படித்து புரிந்து கொண்டு பேச வேண்டும் என்று கூறிய அவர், தந்தை பெரியார் கருத்துக்கள் கோபுரத்தில் வைக்கப்பட வேண்டியவை என்றும் தெரிவித்தார்.