Categories
மாநில செய்திகள்

பேனர் வைக்க அனுமதி பெறப்பட்டதா…? தெரியாது….. 4 பேரை விடுதலை செய்த நீதிமன்றம்…..!!

பேனர் வைத்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேரையும் ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதிமுக பிரமுகர்  ஜெயகோபால் வைத்திருந்த இல்ல திருமண விழா பேனர் விழுந்து இரு சக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ கீழே விழுந்து , அவர் மீது லாரி மோதி உயிர் இழந்தார். இந்த சம்பவம்  தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் ஜெயபால் தலைமறைவாகி இருந்தார். இதைத்தொடர்ந்து நீதிமன்றங்கள் ஜெயகோபாலை கைது செய்யாதது குறித்து கடுமையான கண்டனங்களை பதிவு செய்த நிலையில் நேற்று ஜெயகோபால் கைது செய்யப்பட்டு இன்று ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு 14 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

பேனர் விவகாரத்தில் பள்ளியக்காரனை காவல்நிலையம் மற்றும் பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினரும் வழக்கு பதிவு செய்தனர். மேலும் இந்த வழக்கில் கொடிகட்டுதல் , பேனர் வைக்கும் பணியில் ஈடுபட்ட பழனி , சுப்பிரமணியன் ,  சங்கர் , லட்சுமிகாந்த் ஆகிய 4 பேரை இன்று காலை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடைபெற்ற பின் 4 பேரையும் ஆலந்தூர் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர் படுத்தினர்.

இதில் நீதிபதி வைக்கப்பட்ட பேனருக்கு அனுமதி பெறப்பட்டதா ? என்ற நீதிபதியின் கேள்விக்கு 4 பேரும் தெரியாது என்று தெரிவித்தனர். பின்னர் 4 பேரும் எளிதில் ஜாமீனில் வெளியே வரக்கூடிய அளவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதால் 4 பேரையும் சிறையிலடைக்க மறுத்த நீதிபதி காவல் நிலைய ஜாமீனில் நாலு பேரையும் விடுவிக்க பள்ளிகரணை போலீசாருக்கு பரிந்துரை செய்தனர். பேனர் வைத்த ஜெயகோபாலை சிறையிலடைக்க உத்தரவிட்ட நீதிபதி இவர்கள் 4 பேரையும் விடுவித்தது.

Categories

Tech |