ராகவா லாரன்ஸ், இயக்குனர் ஷங்கர் மற்றும் ஏ.ஆர்.முருகதாசை விட சம்பளம் அதிகம் வாங்க உள்ளதாக கூறப்படுகிறது.
தென்னிந்திய டைரக்டர்களில் அதிக சம்பளம் வாங்கியவர் என்ற பெருமைக்குரியவர் ஷங்கர். இவர் ஒரு படத்திற்கு ரூ.20 கோடி வாங்கி வருவதாக கூறப்படுகிறது. இவருக்கு அடுத்ததாக இருந்த ஏ.ஆர்.முருகதாஸ் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து, ‘மார்க்கெட்’ அந்தஸ்தை உயர்த்திக் இவரும் ஒரு படத்திற்கு ரூ.20 கோடி சம்பளம் பெறுவதாக பேசப்படுகிறது. ஆனால் தற்போது ஷங்கர் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் என இருவரையும் சம்பள விஷயத்தில், ராகவா லாரன்ஸ் முந்தியுள்ளார்.
லாரன்ஸ் தான் நடித்து இயக்கி மிகப்பெரிய வெற்றியை கொடுத்த ‘காஞ்சனா’ படத்தை இந்தியில் இயக்கி வருகிறார். அதில் கதாநாயகனாக அக்ஷய்குமார் நடிக்க உள்ளார் . டைரக்டர் ராகவா லாரன்சுக்கு இந்த படத்துக்கான சம்பளம் ரூ.50 கோடி என்று கூறப்படுகிறது. இதன் மூலம் ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ் இருவரையும் சம்பள விஷயத்தில், ராகவா லாரன்ஸ் பின்தள்ளியுள்ளார்.