தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி-க்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக , பாமக , தேமுதிக , புதிய தமிழகம் , புதிய நீதி கட்சி மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்று அவர்களுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டது. இதில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தஞ்சை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராக N.R நடராஜன் தஞ்சையில் போட்டியிடுவார் என G.K வாசன் அறிவித்தார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து G.K பிரிந்து வந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கினார்.அவர் தமாக கட்சியை தொடங்கிய போது இருந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்க வேண்டுமென்று தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்திய நிலையில் தற்போது தமிழ் மாநில காங்கிரஸ் சைக்கிள் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார் . இதையடுத்து தமாக கட்சிக்கு 1996_ஆம் ஆண்டின் சின்னமான சைக்கிள் சின்னம் கிடைத்துள்ளதால் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் சைக்கிள் சின்னம் கேட்டு கிடைக்காததால் அவர் தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.