சிங்கப்பூரில் இருக்கும் இலங்கையின் முன்னாள் அதிபரான கோட்டபாய ராஜபக்சே சவுதி அரேபியாவிற்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்ததால் முன்னாள் அதிபர் கோட்டபாய ராஜபக்சே தன் மாளிகையிலிருந்து தப்பி, மாலத்தீவிற்கு சென்றார். அதனைத்தொடர்ந்து, சிங்கப்பூருக்கு சென்று விட்டார். அங்கு சில நாட்கள் தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
அதன் பிறகு, அங்கிருந்து வெளியேறி அமெரிக்க நாட்டிற்கு செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், அந்நாட்டு ஆதரவோடு சவுதி அரேபியாவிற்கு செல்ல தீர்மானித்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. நாட்டில் நிலைமைகள் சீரான பிறகு மீண்டும் அவர் நாடு திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.