Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“கோரிக்கையை நிறைவேற்றும் வரை போராடுவோம்”… மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள்… 23 பேர் அதிரடி கைது…!!

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் 6-வது நாளாக நேற்று சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று 6-வது நாளாக பாலக்கரை ரவுண்டானா அருகில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தொகுப்பு ஊதியத்தில் பணி புரிபவர்களுக்கு கால ஊதியம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியுள்ளனர்.

இதனையடுத்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 23 பேரை காவல்துறையினர் கைது செய்து வேன் மூலம் தனியார் மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Categories

Tech |