ஆய்வகப் பணியாளர்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தினுள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் வேலை செய்யும் ஆய்வகப் பணியாளர்கள் தங்களது கோரிக்கையை நிறைவேற்றும்படி தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தினுள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் அவர்கள் “ஆய்வக நுட்பனர் நிலை 2 காலிப்பணியிடங்களை மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட வேண்டும், காலமுறை ஊதியமாக அறிவிக்கப்பட வேண்டும்,
தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் 6 மாதங்களாக ஊதியமின்றி தவிக்கும் 8 ஆய்வக நுட்பனர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் கோஷங்கள் எழுப்பியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மைக்கேல் பாபு தலைமை தாங்கி மற்றும் நிர்வாகிகள் செந்தில் சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.