Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மாநில அளவிலான போட்டி… 7 பிரிவிலும் வெல்லப்பட்ட பரிசு… திறமையை வெளிபடுத்திய அரசு பள்ளி மாணவர்கள்…!!

மாநில அளவிலான கராத்தே போட்டியில் சிலம்பூர் அரசு பள்ளி மாணவ மாணவிகள் 11 பேர் முதல் மற்றும் இரண்டாவது இடங்களை பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிலம்பூரில் இருக்கும் அரசு பள்ளி மாணவ மாணவிகள் மாநில அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொண்டுள்ளனர். இந்த போட்டி தஞ்சை மாவட்டத்தில் வைத்து நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர். அதில் குறிப்பாக ஏழு வயதிற்கு மேல் கல்லூரி படிக்கும் மாணவ மாணவிகள் மட்டுமே இதில் பங்கேற்கலாம்.

இந்தப் போட்டி 7 பிரிவுகளாக நடத்தப்பட்டுள்ளது. அதில் உதையாட்டம், சிலம்பம், குத்துச்சண்டை, கத்தா, கராத்தே, குமித்தே, வாள்வீச்சு என இந்தப் போட்டி பிரிக்கப்பட்டிருந்தது. இதில் சிலம்பூர் அரசுப் பள்ளி மாணவர்கள் 21 பேர் கலந்துகொண்ட அதில் 11 பேர் 7 பிரிவிலும் முதல் மற்றும் இரண்டாவது இடங்களை தக்க வைத்துக் கொண்டு பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். இந்த வெற்றியை பெற்று தந்த மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர் சரவணனை பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் பெற்றோர்களும் ஊர் மக்களும் பாராட்டியுள்ளனர்.

Categories

Tech |