சத்துணவு ஊழியர்கள் சிவகங்கை பழைய நீதிமன்றத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்திலுள்ள சத்துணவு ஊழியர்கள் சிவகங்கை பழைய நீதிமன்றம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் வலியுறுத்திய கோரிக்கைகளாவது “சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வூதியம் ரூபாய் 9000 வழங்க வேண்டும், காலி பணியிடங்கள் அனைத்தையும் நிரப்பப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க பொருளாளர் பானுமதி, மாவட்ட இணைச் செயலாளர் மலர்கொடி ஆகியோர் தலைமை தாங்கி உள்ளனர். மேலும் மாவட்ட தலைவர் கண்ணுசாமி முன்னிலை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 247 பெண்கள் உள்பட 259 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.