அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் தொடர்ந்து இரண்டாவது நாளாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும்படி தொடர்ந்து இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் அவர்கள் வலியுறுத்தி கோரிக்கைகளாக அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக வேண்டும், மேலும் முறையான கால ஊதியம் காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டத்தை அவர்கள் தொடர்ந்து இரண்டாவது நாளாக மரத்துக்கு அடியில் அமர்ந்து நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு மாவட்ட இணைச்செயலாளர் பத்மா தலைமை தாங்கியுள்ளார். மேலும் இந்த போராட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.