அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் தொடர்ந்து இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் அவர்கள் வலியுறுத்திய கோரிக்கைகளாவது அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஓய்வு பெறும் போது பணி கொடையாக அங்கன்வாடி ஊழியர்களுக்கு தலா ரூபாய் 10 லட்சமும் உதவியாளர்களுக்கு தலா ரூபாய் 5 லட்சமும் வழங்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டத்தில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். மேலும் இவர்கள் குழுவாக அமர்ந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை ஒப்பாரி வைத்து வலியுறுத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் சங்க மாவட்ட தலைவர் கவிதா தலைமை தாங்கியுள்ளார். மேலும் சி.ஐ.டி.யு தொழில் சங்க மாநில செயலாளர் நாகராஜன், மாநில குழு உறுப்பினர் அங்கம்மாள், அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்ட நிர்வாகிகள் லில்லி புஷ்பம், ஈஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசியுள்ளனர்.