இந்திய கேப்டன் விராத் கோலியை விட கம்பீர் ஆக்ரோசமானவர் என்றால் மிகையல்ல.
இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வு பெற்று டெல்லி கிழக்கு மக்களவை தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருக்கும் கவுதம் கம்பீர் ஆக்ரோசமாக செயல்படுவதில் விராத் கோலியின் முன்னோடி என்றால் அது மிகையல்ல. கிரிக்கெட் களத்தில் மட்டுமல்லாமல் நாட்டில் நடைபெறும் முக்கிய பிரச்சனைகளுக்கும் ஆக்ரோஷமாக கருத்துக்கள் கம்பீர் தெரிவித்து வந்தவர். 2003ஆம் ஆண்டு வங்கதேசத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகமான கம்பீர் 2004ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக போட்டிகளில் தான் டெஸ்ட் தொடரில் அறிமுகமானார்.
அதாவது 2003 ஆம் ஆண்டு உலக கோப்பை தொடர் முடிந்த அடுத்த மாதம்தான் கவுதம் கம்பீர் அணியில் சேர்க்கப்பட்டார். தொடக்கத்தில் கம்பீரின் ஆட்டம் உச்சத்திற்கு இல்லாததால் அணியில் அவருக்கான இடம் நிலையற்றதாகவே இருந்தது. 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடருக்கான அணியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி முதல் சுற்றிலேயே வெளியேறியதை அடுத்த நடைபெற்ற 20 ஓவர் உலகக் கோப்பையில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதில் ஒருவராக அணியில் சேர்க்கப்பட்டார் காம்பீர்.
இதில் சிறப்பாக விளையாடி அணியில் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார் அவர் இதன் முத்தாய்ப்பாக 2011ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் முக்கிய காரணியாகவும் கம்பீர் தான் விளங்கினார். 2009 ஆம் ஆண்டு நெய்பியரில் நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சுமார் 10 மணிநேரம் 43 நிமிடங்கள் களத்தில் நின்று 137 ரன்கள் எடுத்த கம்பீர் , ஒற்றை ஆளாக நின்று இந்திய அணியின் தோல்வியை தவிர்த்தார். இவரது கிரிக்கெட் வாழ்க்கையில் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை.
2011ஆம் ஆண்டு உலக கோப்பைக்கு பின்னர் இந்திய அணியில் தனக்கான இடத்தை இழக்க தொடங்கினார் கம்பீர். 2013ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடியது தான் அவரின் கடைசியில் போட்டியாகும். கிரிக்கெட்டில் அவரை ஓய்வு அறிவித்து பாஜக கட்சியில் இணைந்தார். அவருக்கு டெல்லி கிழக்கு மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளராக இடம் கிடைத்தது. அதில் வெற்றி பெற்ற கம்பீர் மக்களவை உறுப்பினராக இருந்து வருகின்றார்.