தஞ்சாவூர் மாவட்டத்தில் அடிப்படை வசதிகள் இல்லாத போக்குவரத்து பணிமனையில் கண்டக்டர் ஒருவர் பாம்பு கடித்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தஞ்சாவூர் மாவட்டம் கீழ் சாவடியை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் புதுக்கோட்டை மண்டல கந்தர்வக்கோட்டை பகுதியில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார் நேற்று முன்தினம் மதுரைக்குச் செல்லும் பேருந்தில் பணிக்கு செல்வதற்கான பேருந்து நிறுத்தம் வளாகத்தினுள் குளிப்பதற்காகச் செல்லும் பொழுது வழியிலிருந்த செடியிலிருந்து ஒரு பாம்பு வந்து அவரை கடித்துவிட்டது
அதன்பின் அவரை மீட்டு தஞ்சை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சக ஊழியர்கள் அழைத்துச் சென்றனர் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார் இதனையடுத்து கந்தர்வகோட்டை போக்குவரத்து பணிமனை வளாகத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கோரியும் சுற்றுச் சுவர் கட்டி தரக்கோரியும் போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்