Categories
மாநில செய்திகள்

குழந்தையை கூட்டிட்டு வாங்க… தொடங்கும் சொட்டு மருந்து முகாம்…. அறிவிப்பை வெளியிட்ட அரசு….!!

வருகின்ற 31-ஆம் தேதி முதல் அனைத்து மாநிலங்களிலும் போலியோ சொட்டு மருந்து முகாமானது தொடங்கவிருக்கிறது.

போலியோ நோய் தாக்காமல் இருப்பதற்காக ஐந்து வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் அரசு சார்பில் போலியோ சொட்டு மருந்து முகாமானது வழக்கமாக நடத்தப்படும். ஆனால் இந்தாண்டு கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி செலுத்துதல் பணி காரணமாக போலியோ சொட்டு மருந்து முகாமானது தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அனைத்து மாநில சுகாதாரத் துறை செயலாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்நிலையில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் வருகிற 31-ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இதனையடுத்து சிறு குழந்தைகளுக்கு போலியோ நோய் தாக்காமல் இருக்க போடப்படும் சொட்டு மருந்து முகாமை டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களும், அந்தந்த மாநிலங்களில் உள்ள முதலமைச்சர்களும் தொடங்கி வைக்கின்றனர்.

Categories

Tech |