Categories
தேசிய செய்திகள்

அரசு பத்திரத்தை…. இனி இவர்களும் வாங்கிக்கொள்ளலாம்…. ரிசர்வ் வங்கி அறிவிப்பு…!!

சிறிய முதலீட்டாளர்கள் அரசு பத்திரத்தை வாங்கும் வசதியை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் பிப்ரவரி மாதத்திற்கான நாணயக் கொள்கை கூட்டம் நடைபெற்றது. இது மத்திய பட்ஜெட் தாக்கல் பிறகு நடைபெறும் கூட்டம் என்பது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இந்த கூட்டத்தில் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் கலந்து கொண்டுள்ளார். அப்போது ரெப்கோ வட்டி விகிதம் தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதுமட்டுமல்லாமல் அரசு பத்திரங்களில் சில்லறை முதலீட்டாளர்கள் வாங்கும் வகையில் சலுகை அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதன் மூலமாக சில்லரை முதலீட்டாளர்கள் அரசின் பாத்திரத்தை சந்தைகளில் முதலீடு செய்யலாம்.

அவர்கள் ரிசர்வ் வங்கியில் கணக்கு தொடங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விதிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார். உலகின் மற்ற நாடுகளைப் போல இந்தியாவிலும் இந்த வசதி நடைமுறைக்கு வர இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். சிறந்த பாதுகாப்பான முதலீடாக இருக்கும் இந்த அரசு பத்திர சந்தை தற்போது வரை பெரிய நிதி நிறுவனங்கள் தான் முதலீடு செய்து வருகின்றனர். இதை மேலும் விரிவுபடுத்தி சிறிய முதலீட்டாளர்கள் அரசு பத்திரங்களை வாங்கும் வசதியை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது.

Categories

Tech |