அரசு பேருந்து மோதி பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெங்கராஜபுரம் பகுதியில் கட்டிட தொழிலாளியான ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடன் வேலை பார்த்து வரும் பழனியம்மாள் உள்ளிட்ட 2 பெண்களை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
இந்நிலையில் வேகத்தடை அருகில் நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்த மூன்று பேரும் கீழே விழுந்துள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பேருந்திலிருக்கும் பின்புற சக்கரத்தில் பழனியம்மாள் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். இதனை அடுத்து ராமகிருஷ்ணன் மற்றும் அவருடன் வந்த மற்றொரு பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
இதுகுறித்து தகவலஓறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பழனி அம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.