கடலூர் மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்புடன் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
கடலூர் மாவட்டத்தின் பாட்டாளி மக்கள் கட்சியினர் அரசு பேருந்துகளை சேதப்படுத்தியதை முன்னிட்டு கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேசன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்போடு அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனிடையே கடலூர் மாவட்டத்தில் அரசு பேருந்தை சேதப்படுத்திய பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த 150 நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.