லாரி-பேருந்து மோதியதால் பயணிகள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்தில் இருந்து பழனி வழியாக கோவைக்கு செல்லும் அரசு பேருந்தில் 40-க்கும் அதிகமான பயணிகளை ஏற்றி சென்றுள்ளனர். இதை செல்லபாண்டியன் என்ற ஓட்டுநர் ஓட்டிச் சென்றுள்ளார். இதனைப் போல் செங்கல்களை ஏற்றிக் கொண்டு லாரி ஓன்று கோவைக்கு சென்று விட்டு திரும்பி வந்துள்ளது. அப்போது எதிர்பாராவிதமாக அரசு பேருந்தும், லாரியும் பழனி அருகாமையில் இருக்கும் தாழையூத்து பகுதியில் நேருக்கு நேர் மோதி உள்ளது. இந்த விபத்தில் முன்று பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இதனை அடுத்து பேருந்தில் பயணம் செய்த பத்து பேரும் மற்றும் லாரியில் வந்த 4 பேரும் படுகாயமடைந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து விபத்தில் பலியான 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.