இந்திய ரிசர்வ் வங்கி நேற்று (வியாழக்கிழமை) அரசு மற்றும் பெருநிறுவன (கார்ப்பரேட்) பத்திரங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான (எஃப்.பி.ஐ) முதலீட்டு வரம்பை உயர்த்தியது. இதனால் நாட்டில் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
முந்தைய விதிகளின்படி, ஒரு வெளிநாட்டு முதலீட்டாளரின் குறுகிய கால முதலீடுகள் 20 விழுக்காட்டை தாண்டக்கூடாது. இந்த விதி பெருநிறுவன (கார்ப்பரேட்) பத்திரங்களுக்கும் பொருந்தும்.
இந்நிலையில் தற்போது அது 20 விழுக்காட்டிலிருந்து 30 விழுக்காடாக மாற்றப்பட்டுள்ளது. இந்த தகவல் இந்திய ரிசர்வ் வங்கி அளித்துள்ள அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி எஃப்.பி.ஐ முதலீடுகளுக்கு சில தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளன.
இதேபோல் கடன் முதலீடும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. வி.ஆர்.ஆர் முதலீட்டு இடைவெளி இரட்டிப்பாகி 1.5 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. மேலும் எஃப்.பி.ஐ. கடன் பரிமாற்ற நிதி வர்த்தகத்துக்கும் அனுமதி அளிக்கிறது