நூதன முறையில் அரசு ஊழியரை ஏமாற்றிய மர்ம நபர் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெருமநாடு பகுதியில் பால்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு ஊழியராக வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் பால்ராஜின் செல்போன் எண்ணிற்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் நான் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி வங்கி கணக்கு எண், ஏடிஎம் நம்பர் முதலானவற்றை பெற்றுள்ளார். இதனையடுத்து பால்ராஜிற்கு வங்கி கணக்கிலிருந்து 1 லட்சத்து 40 ஆயிரம் எடுத்துள்ளதாக குறுந்தகவல் வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பால்ராஜ் உடனடியாக காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து செல்போனில் பேசிய மர்ம நபர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் தற்போதைய சூழலில் இணையவழி மோசடிகள், வங்கியில் இருந்து பேசுவதாக கூறி பண மோசடி செய்வது போன்றவை வாடிக்கையாக இருந்து வருகிறது என்பதை உணர்த்துகிறது.