புதுச்சேரியில் அனைத்து அரசு ஊழியர்களும் நாளை முதல் பணிக்கு வரவேண்டுமென உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி அரசு அத்தியாவசிய துறைகளை தவிர்த்து இதர துறைகளில் 50 சதவீதம் பேர் பணிக்கு வந்தால் போதும் என உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து தற்போது இந்த உத்தரவை விலக்கி, அனைத்து அரசு ஊழியர்களும் பணிக்கு வரவேண்டுமென புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அரசின் சார்பு செயலாளர் ஜெய்சங்கர் இன்று ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அந்த சுற்றறிக்கையில் குருப் பி, குரூப் சி பிரிவு அதிகாரிகள் 50 சதவீதம் பேர் பணிக்கு வந்தால் போதும் என்று உத்தரவு, ஜூன் 15ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் ஜூன் 16-ஆம் தேதி முதல் அனைத்து பணியாளர்களும் பணிக்கு வரவேண்டுமென உத்தரவிட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.